கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறை மொபைல் ஆப்ஸ். தொட்டதுக்கெல்லாம் ஆப்ஸ் வந்து விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னனர் 2ஜிபி ரம் கொண்ட மொபைல்கள் அதிகம் விற்றன. இன்றைய காலகட்டத்தில் 4,8 ஜிபிக்களாக வளர்ந்திருக்கிறது.2ஜிபி ரம் கொண்ட மொபைலில் எத்தனை ஆப்ஸ்கள் டவுண்லோட் செய்யலாம்?
நம் மொபைலில் எத்தனை ஆப்ஸ் இருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முக்கிய காரணி ரம் அல்ல.
இன்டெர்னல் மெமரிதான் என்பதை மறக்கவேண்டாம்.அப்ஸ் இயங்கும் போதுதான் ரம் தேவைப்படும். ஃபேஸ் புக் போன்ற அப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்கும் போதுதான் ரம் தேவைப்படும்.ஃபேஸ்புக் போன்ற அப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்கும்.அவை தவிர மற்ற ஆப்ஸ் ரம் மெமரியைச் சாப்பிடாது. எனவே,இன்டெர்னல் மெமரிதான் எத்தனை ஆப்களை டவுண்லோட் செய்யலாம் என்பதை முடிவுசெய்யும் மேல் அதிகாரி.
8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மொபைலில் 2ஜிபி வரை அப்ஸுக்காக ஒதுக்கலாம். ஒப்ரேட்டிங் சிஸ்டமே 2ஜிபி வரை எடுத்துக்கொள்ளும்.மீதமிருக்கும் 4 ஜிபியை ஃபைல்கள் ஸ்டோர் செய்ய ஒதுக்கலாம். அப்படியென்றால்,2ஜிபியில் எத்தனை அப்ஸ் இன்ஸ்டோல் செய்வது?தாராளமாக 40 அப்ளிக்கேஷன்கள் வரை இன்ஸ்டோல் செய்து கொள்ளலாம்.
பொதுவாக அப் ஒன்றின் அளவு 10 எம்.பி.யில் இருந்து 200 எம்பி வரை இருக்கும். சில ஹெச்.டி.கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ் 3ஜிபி கூட இருக்கும் அது தனிக்கதை. சராசரி யாக,2ஜிபி மெமரிக்கு 40 ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம். 4ஜிபி மெமரிக்கு 40-50 வரை இன்ஸ்டால் செய்யலாம்.
எக்ஸ்டெர்னல் மெமரி கார்ட் உதவியுடன் கூடுதல் ஆப்களை இன்ஸ்டால் செய்பவர்களும் உண்டு. அதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஒன்று,மெமரி கார்டை அகற்றினால் அதில் இன்ஸ்டால் செய்யப்பட்ட அப்ஸ் இயங்காது.
இரண்டாவது,அனைத்து ஆப்ஸும் மெமரி கார்டில் இன்ஸ்டால் செய்யமுடியாது.
சில அப்ஸ் போன் மெமரியில் மட்டுமே இயங்கும்.
இப்போது வரும் பல ஸ்மார்ட் போன்கள் அப்பிள் காட்டிய வழியிலேயே பயணிக்கின்றன. அதாவது,இன்டெர்னல் மெமரியை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். மெமரி கார்ட் போடும் ஒப்ஷனைத்தர மறுக்கிறார்கள். அல்லது,இரண்டாவது சிம் போடும் ஸ்லாட்டிலே மெமரி கார்ட் ஒப்ஷனை தருகின்றார்கள். அதாவது,இரண்டு சிம்கள் போடலாம். அல்லது ஒரு சிம்,ஒரு மெமரி கார்ட் மட்டுமே போடலாம் என்கிறார்கள்.கூடுதல் மெமரி கொண்ட மொபைல்களை வாங்கினால் விலை அதிகமாக வைத்து விற்கிறார்கள்.
ஆனால்,எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டால்,நிச்சயம் ஒரு ஸ்மாட்போனுக்கு 32ஜிபி மெமரியாவது தேவைப்படும். இதுவும் அவ்வப்போது லப்டொப்பில் இணைத்து,தேவையான ஃபைல்களை பேக்கப் எடுத்துவைத்துவிட்டு,மொபைலில் அழிக்கும் வாப்பிருப்பவர்களுக்கே.மொபைல் மட்டும் தான் பயன்படுத்துபவர் என்றால், 64 ஜிபி கூட போதாது.8ஜிபி மெமரி, 2ஜிபி கொண்ட மொபைல் யூஸர்ஸ் தயங்காமல் 40 அப்ஸ் வரை இன்ஸ்டோல் செய்யுங்கள். அது போதாது என்பவர்களுக்கு மெமரி கார்ட்தான் தீர்வு. அடுத்த முறை மொபைல் வாங்கும் போது,இன்டெர்னல் மெமரியை மனதில் வைத்து முடிவெடுங்கள்.
அதிகப்படியான ஆப்ஸ்களை பயன்படுத்துவதனால் மொபைல் அதிகமான நேரத்தை உங்கள் நாள்பொழுதில் எடுத்துக்கொள்கின்றது.மிக அத்தியாவசியமான ஆப்ஸ்களை மாத்திரம் தரவிறக்கம் செய்து வைத்திருங்கள்,கேம்ஸ்களை தேவைக்கு அதிகமாக வைத்திருப்பது உங்கள் மொபைல் ரம்மின் வேகத்தை குறைக்கும்.
குறிப்பிட்ட நேரத்தினை ஒதுக்கி மினஞ்சல்,குறுஞ்செய்திகள்,அழைப்புக்களை சரிபாருங்கள். அவ்வப்போது மெபைல் ஸ்ரோஜையும் கண்காணியுங்கள் எந்தஆப்கள் அதிகம் ஸ்ரோஜ் எடுத்துக்கொள்கின்றன.இவ்வாறான சீரான பாவனையின் மூலம் மெபைல் அதிககாலம் உங்களுக்கு எந்த பிரைச்சனையும் தருவதில்லை.
கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...
Comments
Post a Comment