சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்தே பௌத்தமத ஆதிக்கமும் அதன் இனவாத கருத்தியல்களின் வெளிப்பாடாகவே இலங்கை அரசியல் இருந்து வருகிறது ஆனால் இன்றையகாலகட்டத்தில் நிலைமை மாற்றமடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் இளையசமுதாயத்தை சிந்திக்கவைத்துள்ளதுடன் போராடும் மநோநிலையும் தூண்டியுள்ளது என்றால் மிகையாகாது. இவ்வளவு காலமும் பௌத்தபேரினவாதத்தில் மூள்கியிருந்த மக்கள் தங்கள் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய பயத்தை தோற்றுவித்ததையடுத்து தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டதன் விளைவு பெரும்பான்மையானோர் பௌத்த பேரினவாதம் பயனற்ற மற்றும் ஆபத்தான ஒன்று என்பதை உணர்ந்துள்ளனர். இந்த தெளிவு எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கும் சிறுபான்மை மக்களின் குரல்களுக்கு வலுச்சேர்பதாக அமையும் எனலாம். சிங்களவர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை என்றும் சந்தித்ததில்லை அவர்கள் பொறுமை எல்லைமீறும் போது அதன் வெளிப்பாடு பல கேள்விகளை எழுப்பியது? நாட்டின் இந்நிலைக்கு யார்காரணம்? ஆட்சி அதிகாரங்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தின்கீழ் சர்வாதிகாரமாக செயற்படுகிறது? ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பல...
Articles, Day Today News, and more