Skip to main content

இன்று என்பது ஓர் பரிசு


தற்போது 2023 ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உள்ளோம் இன்று கார்த்திகை 27. இந்த வருடம் பல எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பமானது காரணம் 3 வருட Covid-19 கெடுபிடிகளின் பின்னர் சுததந்திர பறவைகளாக மக்கள் சிறகடித்து வீதிகளிலும் தடைகளின்றி விமானப்பயணங்கள் மேற்கொள்ள தொடங்கினார்கள்.கனடாவை பொறுத்தவரை கனடா Covid-19 ன் பாதிப்பிலிருந்து கனடிய நிறுவனங்கள் மீண்டுவர முடியவில்லை இருந்த போதிலும் பரபரப்பாகவே நாடு இயங்கியது எனலாம். உலகளாவிய ரீதியில் குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலைகாரணமாக வேலையிழப்பு,வேலையின்மை,அத்தியாவசியப்பொருட்களின் வரலாறுகாணாத விலையேற்றம், வீடுகளின் மாதப்பணம் முதல் கார்கள், தங்குமிடங்கள் என விலையேற்றம் காணாத விடயங்களே இல்லை எனலாம்.


புதிதாக கனடாவருகை தந்தவர்களுக்கோ அதிர்ச்சிமேல் அதிர்ச்சி இன்னொரு பக்கம் அகதி அந்தஸ்து கோரி பெரும் கூட்டம், கடந்த ஆண்டு அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்தின் தளர்வால் மாணவர்கள் பலர் வேலையற்று திண்டாடினார்கள் அந்த நிலமை தொடர்கிறது இவ்வாறு ஏற்றம் இல்லாமல் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.அத்துடன் அதிர்ச்சியளிக்கும் விடயமாக கனடா வந்த பல வெளிநாட்டு குடியுரிமையாளர்கள் கனடாவை விட்டு வெளியேறிவருவதும், கனடாவில் பிறந்து வளர்ந்த கனடியர்களும் காணும் இதற்கு மேல் பொறுக்கமுடியாது என தலைதெறிக ஓடுகின்றனர். என்னால் குறிப்பிடமுடிந்த சில விடயங்களே இவை. இதனை விட பல கனடியர்கள் கனடாவில் வாழமுடியவில்லை என கண்ணீர்வடித்த காணொளிகளை நீங்கள் பாரத்திருக்க முடியும்.

இந்த நிலமை நீடிக்கப்போவதில்லை நிட்சயம் கனடா மவிரைவில் மீண்டுவரும். இவ்வாறான கடினமான காலங்களை நாம் கனடியர்களாக கடந்துவரவேண்டும். நமக்கு கிடைக்கும் ஒவ்வொருவாய்ப்புக்களையும் நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். சிலவேளைகளில் நம்மால் எதையும் செய்துகொள்ளமுடியாத நிற்கதியான நிலை ஏற்படும் அப்போது தன்னம்பிக்கையுடன் காத்திருங்கள் மாற்றம் நிட்சயம் நிகழும். "நேற்று என்பது வரலாறு நாளை என்பது புதிரானது ஆனால் இன்று என்பது நமக்கு கிடைத்த பரிசு"  நாம் நாளை பற்றி அதிகம் கவலைப்பட்டுக்கொள்ளாமல் அல்லது அதிக எதிர்பார்ப்புக்களை பட்டியலிடவேண்டாம். இன்றைய நாளை நீங்கள் சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் அத்துடன் நாளைய பொழுதை திட்டமிடுவதன் மூலம் ஏமாற்றங்களை இல்லாமல் செய்து இந்த கடினமான காலத்தை வெல்லமுடியும்.


மாற்றம் கண்ணெட்டும் தூரத்தில் உள்ளது எனவே நாம் நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...