Skip to main content

விதிக்கப்படும் வரிகள் சர்வதேசத்திடம் கடன் பெறவே


 இலங்கை கடந்த 3 ஆண்டுகளாக கடும் நெருக்கடியினுள் சிக்கியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே தற்போது VAT வரி 15% லிருந்து18% அதிகரித்துள்ளதுடன், 18 மேற்பட்டஅனைத்து இலங்கையர்களும் TIN (Tax Identification Number) வரி கட்டுபவரை அடையாளப்படுத்தும் இலக்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

முதலில் ஏன் நாம் வரி செலுத்தவேண்டும் உதாரணமாக மேற்கத்தேய நாடுகளில் வரி முறைமை பல்நெடுங்காலமாக செயல் பாட்டிலிருந்துவருகிறது. முன்னேறிய நாடுகள் இதனால் தம் நாடுகளை அபிவிருத்தி செய்தும் பெறப்படும் வரிப்பணத்தின் மூலமும் கல்வி,போக்குவரத்து,மருத்துவம்,ஓய்வூதியம்,வீடு என்று தரமான வாழ்க்கை முறையை மக்களுக்கு வழங்கிவருகிறது. இந்த முறைமை இலங்கைக்கு பொருந்துமா என்று பார்ப்போமேயானால் நடைமுறைச்சிக்கல்கள் ஏராளம் உள்ளன. இலங்கை மக்கள் ஏற்கனவே அதீத பணவீக்கத்தால் அதிகளவு செலவீனங்களை எதிர்நோக்கி வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு சிரமமப்பட்டுக்கொண்டிக்கும் வேளையில் அவர்களிடமிருந்து வரி அறவிடுவது உண்மையில் ஏற்புடையாதா? 

மக்களிடம் பணம் பற்றாக்குறையாக உள்ளது,வாழ்க்கை தரம் உயவில்லை,ஊதியமும் உயரவில்லை, இந்த தருணத்தில் IMF ன் கட்டளைக்கு இணங்கி இந்த வரி முறை இலங்கையில் நடைமுறைக்கு வருமேயானால் மக்கள் கொந்தளிப்படைய வாய்ப்புள்ளது. அரசாங்கள் இவ்வாறான IMF ன் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே கடன் பெற்றுக்கொள்ளமுடியும். இலங்கை போன்ற ஊழல் ஊறிப்போன நாட்டில் பணம் பெரிதும் கையாடலுக்கு உள்ளாகிறது. மேலும் பல இளைஞர் மற்றும் யுவதில் வேலைவாய்ப்பை தேடி நாட்டைவிட்டு பெருமளவு வெளியேறுகிறார்கள், பெரும் பணக்காரர்களும் துபாய்போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள். இங்கு எல்லாம் பழைய நிலைக்கு திரும்பினாலும் வேலைசெய்ய திறமையான மனிதர்கள் இருக்க மாட்டார்கள் முதியவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து இருக்கும். சாதாரண மக்கள் வரி செலுத்தி இந்த நாட்டினுள் வாழந்துகொண்டிருப்பார்கள், சிறந்த மனிதவளம் நாட்டை விட்டு வெளியேறினால் நாடு எப்படி பொருளாதாரத்தில் முன்னேற முடியும்? 


அடிப்படையில் இலங்கை பல தவறுகளை இழைத்துவிட்டது அவை சரி செய்யவே முடியாதவைகளாகவே உள்ளன. வரி செலுத்துவது என்பது வேறு கட்டாயத்தின் பேரில் வறுமையில் வாடும் மக்களிடம் பணம் பறிப்பதுஎன்பது வேறு. சரி தற்போதைக்கு கடன் பெற்றாலும் ஏற்கவே பெற்ற 86.6 பில்லியன் டொலர் கடனை அடுத்ததடுத்த இலங்கை தலைமுறையினரே சுமக்கவேண்டியுள்ளது. சரியாக கொள்கை,திட்டமிடல்கள்,இலக்கு, இல்லாமை ,  மாறாக இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவித்தல், இனவெறுப்பு போன்ற கீழ்தனமான அரசியலால் இலங்கைஅடைந்தது மிகப்பெரிய பொருளாதார சரிவு. இலங்கை இந்த சரிவிலிருந்து தற்காலிகமாக மீண்டாலும் நீண்டகாலத்திற்கு கடினமான வாழ்க்கையே இருக்கும் காரணம் மீள் செலுத்தப்படாத சர்வதேச கடன்கள் மேலும் வாங்கப்படும் கடனகள், நாட்டின் வளங்களை மற்றைய நாடுகளுக்கு விற்பனை செய்தல், இனதுவேச அரசியல், அரசியல் தெளிவற்ற பெரும்பான்மை மக்கள், போதைப்பொருள், இலஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் என பல நூறு பிரச்சனைகள் உள்ளன இது எல்லாம் களையப்படாமல் இலங்கைக்கு விடிவு என்பது இல்லவே இல்லை. ஒருசில பில்லியன்களை கடனாக பெறுவதற்கே திண்டாடும் நாடுஎப்படி தூரநோக்குடன் செயற்பட்டுஇலங்கையை மீட்டெடுக்கும்? 






Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...