Skip to main content

Frugal life


 

சிலவருடங்களா உலகம் முழுவதும் இந்த Frugal lifestyle என்பது பிரபலமாகிவருகிறது. அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் சொல்லவேண்டுமாயின் செலவை குறைத்து வாழ்வது என்று எடுத்துக்கொள்ளலாம்.புது பொருட்கள்,உபகரணங்கள்,இலத்திரனியல் பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்யவேண்டுமென்பது பலரினதும் விருப்பம் ஆனால் இவ்வாறு அதீக கொள்வனவால் எம்மையறியாமலேயே நாம் அதிகளவு பணம் செலவு செய்கிறோம். இந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகி அல்லது தனது செலவுகளை கட்டுப்படுத்த உலக மக்கள் ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கை முறையே இதுவாகும். இந்த வாழ்க்கை முறை வளரந்த பொருளாதாரம் கொண்ட எந்த நாடுகளிலும் வாழும் மக்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த வாழ்க்கை முறை தனிநபர்கள் அல்லது நண்பர்களின் கூட்டு முயற்சியால் நிகழ்வதாகும்.


உதாரணமாக நீங்கள் வீட்டிற்கு வெளியே உணவு அருந்துபவராக இருந்தால் அந்த உணவுக்கான ஒருமாத செலவை நீங்கள் கணக்கிட்டு பாருங்கள்.நீங்கள் வேலைக்கு,கல்வி சம்பந்தமாக வெளியில் செல்பவராயின் உங்கள் காலை/மதிய உணவை வீட்டில் தயார் செய்து கொண்டுபோவீர்களாயின் வெளியில் உணவருந்துவதற்கான செலவை குறைத்துக்கொள்வதுடன் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். நீங்கள் புதிய Model இலத்தினியல் சாதனங்கள் வருடாவரும் கொள்வனவு செய்பவராயின் சுமார் 03-4 வருடங்கள் முன்னர் வெளியான அதே கம்பனி பொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளளலாம்.  புத்தம்புதிய இலத்திரனியல் பொருளும் அடுத்துவரும் வருடங்களில் வருடங்கள் கடந்ததாகவே இருக்குமே தவிர அதன் பயன்பாடு சிறப்பானதாகவே இருக்கும். அல்லது used பொருட்களை கொள்வனவு செய்வதால் அதன் உற்பத்தி விலையிலிருந்து பெருமளவு பணத்தினை சேமிக்க முடியும்.


சிலர் புதிய பொருட்களை வாங்கினால் அது காலம் செல்ல பெறுமதிஇழக்கும் என்பதை சிந்திப்பதில்லை ஒரு புதிய கார் ஒன்றை மாததந்தோறும் பணம் செலுத்தி வைத்திருப்பதை விட அதே நிறுவனத்தில் சுமார் 10 வரும் முந்த model கார்ஐ முழுப்பணம் செலுத்தி பெறுவதால் மாதாந்த செலவு இல்லை மேலும் நல்ல ஒரு காரை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாழ்க்கை முறை நடுத்த மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


சிறுகார் மற்றும் சிறு/நடுத்தரமான வீட்டினை கொள்வனவு செய்தல் சிலர் வீட்டினை கொள்வனவு செய்யாமல் வாடைகைக்கு இருத்தல், online shopping ஐ தவிர்த்தல், பக்கத்திலிருக்கும் கடைகளுக்கு நடந்து செல்லுதல், ஒரமாதத்திற்கு தேவையான வீட்டுப்பொருட்களை பட்டியலிட்டு வாங்குதல், புகைப்பிடித்தல்,மது போன்ற விடயங்களை கைவிடுதல், உடற்பயிற்சி செய்தல், அரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளுதல், செலவை நண்பர்களுடன் பகிரந்து கொள்ளுதல், குறைந்தளவு உடைகளை கொள்வனவு செய்தல் இன்னும்பல நீங்கள் வாழும் இடம் உங்கள் வருமானம் மற்றும் உங்கள் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப நீங்கள் பல விடயங்களை உங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளலாம். 


இந்த வாழ்க்கை முறை செலவை கட்டுப்படுத்த முனைபவர்களுக்கும், எளிமையான மகிழச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைப்பவர்களுக்கமே பொருந்தும். இந்த வாழ்க்கை முறையை விரும்பி ஏற்பவர்களுக்கே 










Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...