Skip to main content

இனி கனடா போகமுடியாதா? 😱 இரண்டுவருட Study Visa தடை


 

கனடாவிற்கு வருவதற்கும்/குடியேறுவதற்கும் பலரால் பயன்படுத்தப்படும் ஓரு வழி Student Visa முறையாகும் இதன் மூலம் பல இலட்சம் மக்கள் உலகெங்கிலுமிருந்து வருடாவருடம்கனடாவிற்கு வருகைதந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பலகாலமாக இலகுவாக இருந்த இந்த முறமை இனி Student visa வில் கனடாவினுள் நுளையவே முடியாததாக மாறிவிட்டுள்ளது.கடந்த 22 ம் திகதி Immigration minister Mr.Marc Miller அவர்கள் முக்கியமான அறிவுப்புக்களை வெளியிட்டுள்ளார் அதில் இனிவரும் 2வருடங்களுக்கு கனடாவிற்கு வருகை தரும் மாணவர்கள் அளவை 36% ஆக குறைக்கப்போவதாகவும் 2023 ஐ ஒப்பிடும் போது 36% வீசாக்களை 2024 ல் குறைக்கப்போவதாகவும் குறிப்பாக Ontario மாகாணத்தில் 50% Student Visa வை குறைக்கப்போவதாகவும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வீசா குறைப்பு Masters & Doctorate மாணவர்களுக்கு பொருந்தாது.

அடுத்ததாக student visaவில் கனடாவருபவரின்துணை ஆண்/பெண் இனி வேலைசெய்யமுடியாது இதுவரை இருந்துவந்த Open Work permit முறை Masters & Doctorate படிக்க வரும் மாணவர்களின் துணை ஆண்/ பெண் வேலை செய்யமுடியும். 1 Year Diploma அல்லது 2 Year Diploma படிக்கவருபவர்கள் கனடாவில் இனி வேலைசெய்யமுடியாது. தொடர்ந்து கனடா முழுவதுமாக மாகாணம் வாரியாக எவ்வளவு மாணவர்கள் எந்த கல்லூரிகளில் என்பதை மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டலின் படி மாகாணங்கள் மேற்கொள்ளும்.

கனடாவில் அதிகப்படியான மாணவர்களின் வருகையால் வாடகை வீடுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதுடன் வாடகைகள் பெருமளவு அதிகரித்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதுடன் அவர்களுடைய கல்லூரிகள் ஒரு சிறிய கட்டடம் ஒன்றிலே இயங்குகிறது கனடாவின் சட்டங்களுக்கு முரணாக செயற்படுவதாகவும் அவ்வாறான கல்லூரிகளுக்கு படிக்க வரும் மாணவர்கள் உண்மையில் வகுப்புக்களில் கவனம் செலுத்தாது முழுநேர வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன, food banks இலவச உணவு வழங்குமிடங்கள் பல சர்வதேச மாணவர்கள் தங்கியிருக்கின்றனர் இதனால் தேவையுள்ளவர்கள் உணவு கிடைக்காமல் குற்றம் சாட்டியிருந்தனர் இந்த பிரச்சனை கடந்த ஆண்டில் பெரும் பேசு பொருளாக அமைந்திருந்தது. 

ஒரு சிலர் தமது வீடுகளில் 10-15 பேரை தங்கவைத்து ஒரு படுக்கைக்கு 500-800 வரை அறவிட்டு அதிக பணம் சம்பாதித்துவந்தனர் இது சட்டத்திற்கு புறம்பானது ஒரு வீட்டின் தளத்தில் ஒரு அறையில் ஒருவர் அல்லது இரண்டு பேரையே தங்கவைக்கமுடியும்.இவ்வாறாக சர்வதேசமாணவர்களை குறிவைத்து மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. கனடாவில் அடிப்படை வேலைகள் எல்லாவற்றிலும் இந்த international student களே வேலைசெய்துவந்தனர் இதனால் கனடாவில் கனடியர்கள் உட்பட பலர் வேலைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அதீத எண்ணிக்கையில் மாணவர்களை உள்வாங்கியதால்  Healthcare உட்பட பல துறைகளில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களை கனடிய அரசு கவனத்தில் கொண்டு இவ்வாறான முடிவை எடுத்துள்ளது. 

கடந்த December 08 Canada Student visa வில் GIC பணத்தை 10,000$ லிருந்து 20,635$ உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். கனடா தற்போது பொருளாதார மந்த நிலையிலிருப்பதால் பல விடயங்களை கருத்தில் கொண்டே இந்த இரண்டு வருட தற்காலிக தடையை விதித்துள்ளது. இந்த தடையானது கனடியர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளதுடன் கனடா வந்து தற்போது கல்விகற்றுக்கொண்டிருக்கும் கணிசமான சர்வதேச மாணவர்களிடையிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டுவரட தடை போதாது 5 வருட தடை போடவேண்டும் அத்துடன் Refugee களுக்கும் தடை வேண்டும்,  Immigration ல் தற்காலிக தடைவேண்டும் என கனடியர்கள் கருத்துக்களை YouTube தளத்தில் பதிவிட்டுவருகின்றனர். 

இந்த அறிவிப்பு எதிர்பாரத்த ஒன்றுதான் கடந்தவருடமே இதனை பற்றிய பேச்சுக்கள் எழுந்தன இருந்த போதிலும் 2024 ல் தான் செயற்பாட்டுக்கு வரஉள்ளது. இந்த தடையால் கனடா வரவேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தொடக்கமாகவே உள்ளது அடுத்து வேறு விசாக்களில் கனடாவில் குடியேறுவதற்கான வழிகளில் தடைகளை எதிர்பார்க்க கூடியதாகவே உள்ளது. 









Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...